சொட்டுகள்

சொட்டுகள்
நீர் மேல் கொப்புளங்கள் 
மணலில்  நட்சத்திரங்கள் 
வரவழைக்கிறது 
மனதில் கவிதையும் கூட ...

பலமுறை 
எனக்கு வலிக்க வேண்டுமென்று 
ஆவேசம் தெறிக்க 
அறைந்த போதும் 
பதில் ஏதுமில்லை 
புன்னகையைத் தவிர .

இப்படியாய் 
கற்றுத்தருகிறது  
எதோ ஒருவிதத்தில் 
நனைந்துக் கொண்டிருப்பதால்.

பிறர் கஷ்டமறியாமல் 
போகும் திசையை 
தடை படுத்தி  விடப்பார்க்கும் 
இந்த மழை த் துள்ளிகளே 
இப்படித்தான். 

Comments