Posts

நாலு எழுத்து படிக்க போய்

தாறு  மாறாட்டு அடிச்ச  வேதனையும் தீரல்ல  இதுவரைக்கும் . இருட்ட வெளுக்க குத்தியிருந்து  படிச்சும் ஒண்ணும் நிக்குதில்லை  மனசில. நாலு  எழுத்து படிச்சாத  இருந்தா நாள ஒருகாலம் பஸ்க்க  போடு பாக்கவும் தெண்ட  வேண்டியது  வரும் பலரும் சொல்லினும் அடிக்கடி . அப்பனும் அம்மையும் தொலஞ்சும் படிக்க    ஆசப்பட்டு  பள்ளிக்கு  போனா படிக்கிறவனுக்கு  தான் சொல்லிக் கொடுக்கிறாரு  டீச்சர் . எ துக்கில    வாறேண்ணு கேக்கிறதுக்கு  பதிலா அடிக்கிறதுக்கு  பதிலா சொல்லித்  தந்திருந்தா என்னாலையும்  வாங்கியிருக்க  முடியும் பஸ்ட்  மார்க்கிண்ணு இப்பவும்  தோணுது ஆர். ஆல்பன்    

சிறகடிக்க சிறகில்லை

விபரம் தெரியாத நாட்களில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி வந்ததுண்டு பள்ளியை  விட்டு  வீட்டுக்கு. பள்ளிக்கு போவது விருப்பம் இல்லாமல் சின்ன வயதில் . இப்ப படிக்க விருப்பப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கிய  பின்னும் முற்றுப்  புள்ளியானது மேல் படிப்பு . வீட்டை  விட்டு வேலை தேடி வெளிநாடு   போய்  திரும்பிய அப்பாவின் கடன்களால் . வெட்டப்பட்டது கல்லூரியை நோக்கி பறந்துக்  கொண்டிருந்த என் மனசின் சிறகுகள். ஆர்.ஆல்பன்   

சாரல் துளிகள்

பரந்து விரிந்து  கிடக்கும்  வானில் வலம் போகும்  கார் முகிலால் உருவாக்கப்பட்ட  சாரல்கள்  காற்றின்  சீற்றத்துக்குப்  பயந்து  கலைந்து தூரம்போய்  நிலம்  பாதிக்கிறது  தன்  விரல்களை . புறம் உதறி  தள்ளி  ஓடிய திசைகளில் ஓடி வருகிறது  முகம் நனைத்து   பச்சைப்  புல்வெளிகளை  காடு மலைகள்  கடல்களின் நினைவுகளில்  பிறப்பெடுத்து  கனிந்து  மழை ஓய்ந்த மறுகணம் தொட்டு  நினைவுகள் சொட்டும்  ஒரு மரமாய் ஆனது  என் வாழ்க்கை . ஆர். ஆல்பன்      

சாபம்

உருப்படமாட்டான் எனக்கப்  பயல அடிச்சவனுக்க  கையில நீக்கம்பு பிடிச்சு அவன் குடும்பம்  வேரற்று, குற்றிமுட்டி அவன் படிய  பாட பாரு . தல போற தப்பா  செஞ்சான் மற்றவனுக்க பெண்ண ஸ்னேஹிச்சாண்டு இப்படி எடுத்திட்டு தல்லி இடிச்சு சதச்சு பிளிஞ்சு  விட்டானுவ வாயில மண்ணு விளுந்தவனுவ இப்படியொக்க  செய்ய என்னம்பா இவன்மாருக்கு மனசு  கேட்டது . நெல்லு வாலு  போல கோரம்  பாயில கெடக்கிய எனக்க  மோனுக்கு வெளிப் பருத்தியும் முட்டையும் கொடுத்துப்   பாக்கிலாம்         நேரம்  வெளுக்கட்டு . ஆர். ஆல்பன் 

சிறகுகள்

சிறகுகள்  இருந்தும் பறந்து பார்க்க  முடியவில்லை . வான் மீது  உலா  வர பூமி மீது  விரல் பதிக்க விடுவதில்லை  ஆளுமைகள் . அடிக்கடி வெட்டப்படுகின்றன  சிறகுகள் நிலைத்திருக்கவும் நிஜம் உதிர்க்காமலிருக்க . ஒடுக்கங்களுக்கு  அடங்கி வதைகளுக்கு  அஞ்சி முடங்கி விட போவதில்லை  யென வெளியேறி வரும்   வேளை நிந்தையின் சித்ரவதைகளுடன்  கழுத்துக்கு தாலி . ஆர். ஆல்பன்