- Get link
- X
- Other Apps
Posts
Showing posts from June, 2018
நாலு எழுத்து படிக்க போய்
- Get link
- X
- Other Apps
தாறு மாறாட்டு அடிச்ச வேதனையும் தீரல்ல இதுவரைக்கும் . இருட்ட வெளுக்க குத்தியிருந்து படிச்சும் ஒண்ணும் நிக்குதில்லை மனசில. நாலு எழுத்து படிச்சாத இருந்தா நாள ஒருகாலம் பஸ்க்க போடு பாக்கவும் தெண்ட வேண்டியது வரும் பலரும் சொல்லினும் அடிக்கடி . அப்பனும் அம்மையும் தொலஞ்சும் படிக்க ஆசப்பட்டு பள்ளிக்கு போனா படிக்கிறவனுக்கு தான் சொல்லிக் கொடுக்கிறாரு டீச்சர் . எ துக்கில வாறேண்ணு கேக்கிறதுக்கு பதிலா அடிக்கிறதுக்கு பதிலா சொல்லித் தந்திருந்தா என்னாலையும் வாங்கியிருக்க முடியும் பஸ்ட் மார்க்கிண்ணு இப்பவும் தோணுது ஆர். ஆல்பன்
சிறகடிக்க சிறகில்லை
- Get link
- X
- Other Apps
விபரம் தெரியாத நாட்களில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி வந்ததுண்டு பள்ளியை விட்டு வீட்டுக்கு. பள்ளிக்கு போவது விருப்பம் இல்லாமல் சின்ன வயதில் . இப்ப படிக்க விருப்பப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கிய பின்னும் முற்றுப் புள்ளியானது மேல் படிப்பு . வீட்டை விட்டு வேலை தேடி வெளிநாடு போய் திரும்பிய அப்பாவின் கடன்களால் . வெட்டப்பட்டது கல்லூரியை நோக்கி பறந்துக் கொண்டிருந்த என் மனசின் சிறகுகள். ஆர்.ஆல்பன்
சாரல் துளிகள்
- Get link
- X
- Other Apps
பரந்து விரிந்து கிடக்கும் வானில் வலம் போகும் கார் முகிலால் உருவாக்கப்பட்ட சாரல்கள் காற்றின் சீற்றத்துக்குப் பயந்து கலைந்து தூரம்போய் நிலம் பாதிக்கிறது தன் விரல்களை . புறம் உதறி தள்ளி ஓடிய திசைகளில் ஓடி வருகிறது முகம் நனைத்து பச்சைப் புல்வெளிகளை காடு மலைகள் கடல்களின் நினைவுகளில் பிறப்பெடுத்து கனிந்து மழை ஓய்ந்த மறுகணம் தொட்டு நினைவுகள் சொட்டும் ஒரு மரமாய் ஆனது என் வாழ்க்கை . ஆர். ஆல்பன்
சாபம்
- Get link
- X
- Other Apps
உருப்படமாட்டான் எனக்கப் பயல அடிச்சவனுக்க கையில நீக்கம்பு பிடிச்சு அவன் குடும்பம் வேரற்று, குற்றிமுட்டி அவன் படிய பாட பாரு . தல போற தப்பா செஞ்சான் மற்றவனுக்க பெண்ண ஸ்னேஹிச்சாண்டு இப்படி எடுத்திட்டு தல்லி இடிச்சு சதச்சு பிளிஞ்சு விட்டானுவ வாயில மண்ணு விளுந்தவனுவ இப்படியொக்க செய்ய என்னம்பா இவன்மாருக்கு மனசு கேட்டது . நெல்லு வாலு போல கோரம் பாயில கெடக்கிய எனக்க மோனுக்கு வெளிப் பருத்தியும் முட்டையும் கொடுத்துப் பாக்கிலாம் நேரம் வெளுக்கட்டு . ஆர். ஆல்பன்
சிறகுகள்
- Get link
- X
- Other Apps
சிறகுகள் இருந்தும் பறந்து பார்க்க முடியவில்லை . வான் மீது உலா வர பூமி மீது விரல் பதிக்க விடுவதில்லை ஆளுமைகள் . அடிக்கடி வெட்டப்படுகின்றன சிறகுகள் நிலைத்திருக்கவும் நிஜம் உதிர்க்காமலிருக்க . ஒடுக்கங்களுக்கு அடங்கி வதைகளுக்கு அஞ்சி முடங்கி விட போவதில்லை யென வெளியேறி வரும் வேளை நிந்தையின் சித்ரவதைகளுடன் கழுத்துக்கு தாலி . ஆர். ஆல்பன்
பரிசல்
- Get link
- X
- Other Apps
காற்றின் கைகளிலாடும் என் பயணங்கள் நிலையற்றதாகி விடுகின்றன . உதயங்களில்லாமல் போன வாழ்க்கையைப் போல கவிழ்க்கப் பார்க்கும் அலைகள் . கோபக் கூக்குரலிட்டுக் துரத்தும் திசையில் என் நினைவுகள் கலையும். நிழல் யாவும் மரக்கிளைகள் இல்லாமல் போன கரையில் நீந்தி களைத்து கரையேற ஒரு குடை தன் தலை மறைத்தவாறு பக்கம் வருகிறது . ஆர்.ஆல்பன்
யதார்த்தம்
- Get link
- X
- Other Apps
முகம் நிமிர்த்தி யறைந்து திருப்பி திருப்பி தகர்த்திருக்கலாம் . எதிர் பாராத விதமான தாக்குதல்களால் நிலை குலைய வைத்திருக்கலாம் . பீறிட்டு கண்ணீர் கசிவதை பார்க்க விரும்பியதால் பொறுமைக்கெதிராய் எழுந்திருக்கலாம் . பத்திரமாய் என்னிடம் அடக்கி வைக்கப் பட்ட புன்னகை மட்டும். கேட்டு விட வில்லை எதைப் பற்றியும் ... எங்கள் பிணைப்பு அகன்று கழன்று நிமிஷத்தில் தூரமாகவிடக் கூடுமென்பதால் . ஆர். ஆல்பன்
நெஞ்சினலைகள்
- Get link
- X
- Other Apps
வார்த்தைகளால் வானுயர்ந்த வள்ளுவரும் சிலையாய் அலைகளின் நடுவே அன்பைப் போதித்த விவேகானந்தருக்கு ஆசிரமம் சமாதிக்குள்ளேயும் காந்தியின் நாட்கள் திறப்பு விழா கனவுடன் காமராஜர் மணி மண்டபம் முத்தமிட்டு சங்கமிக்கும் முக்கடற்கரையில் இனியும் வரலாம் பல பேர் . இவர்களை நம்பிய தொழிலால் பசியாறி விடுகின்றன பொழுதுகள் விடியாத ஒரு இரவின் விளிம்பில் மோதி மோதி சிதைக்கப் பார்க்கும் அத்தனையும் மீறி உயர்ந்து எழுகிறது அலை பிரளமான என் மனசின் உள்ளேயும் ........ ஆர். ஆல்பன்
என்னுலகம்
- Get link
- X
- Other Apps
எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் கலவரம் பீதியுடன் சிதறி ஓடும் மனிதர்கள் வீதியெங்கும் ரத்த வெள்ளம் உயிரோடு கடைசி போராட்டம் அதிர்ச்சியில் உறைந்த முகங்கள் எங்கும் ஒப்பாரிக் கதறல்கள் இனியொருமுறையும் என்னுலகு வேண்டாம் . கலைந்து மேகங்களுடன் மிதந்து வரும் தென்றல் பசுமையின் கொஞ்சலில் பறந்து திரியும் பறவைகள் ஜாதி மத பேதமற்ற மழலை மொழி ரகசியங்களை கிசுகிசுக்கும் தெளிந்த நீரோடை பகையற்ற பரிவுடன் என் மனசு தேடிக் கொண்டிருக்கிறது எப்போதும் ஆர். ஆல்பன்
தேடல்
- Get link
- X
- Other Apps
யாரிடமும் சொல்லாமல் மௌனமாய் தேடுகிறேன் வார்த்தைகளின் அர்த்தங்களை ... தோல்வியின் அனுபவங்களை மனசுக்குள் இருத்தி வெற்றியின் ரகசியங்களை வெளிக் காட்டாமல் தொடர்கிறது என் லட்சியத்துக்கான தேடல் . ஆசைகள் ஒதுக்கி புரட்சிப் பாதைக்காக தடைகளை விலக்கி முன்னேறிக் கொண்டே தீபத்தின் ஒளியில் இருட்டை விரட்டியபடி நம்பிக்கையுடன் தேடுகிறேன் நாளைய நாட்களை . ஆர். ஆல்பன்
கண்ணீரும் கைய்யூமாய் ...
- Get link
- X
- Other Apps
மூத்த மகளுக்க கல்யாணம் முடிஞ்ச மறுவருஷம் முதல் கைக்குழந்தையுடன் வந்து நிக்கியா வீட்ல... கண் காணாத பிறவி குருடியுமாய் இருக்கும் ரெண்டாவது மகளை கெட்டிக் கொடுக்காத வீட்ல ... குடும்ப தகராறில் வெட்டு குத்து குலவாதவுமாய் மாப்பிள்ளை செத்து கடைசி மகளும் வேற வழியில்லாத எனக்க வீட்ல... கழுத்தில முடிச்சு போட்டவன் கண் மூடின பெறவு கருவாடும் மரக்கறியும் கடவம் கணக்கில செமந்து வளத்திய பிள்ளியளோடு எழிச்சு நடக்க ஏலில்லாம நானும் கெடக்கியன் பூமிக்கு பாரமாய் என்ன வீட்ல ... ஆர். ஆல்பன்
துகிலிகை
- Get link
- X
- Other Apps
முடிந்து விட்டதென துயில் கொள்ளும் வேளை தீட்சண்யத்தின் கண் முளைகள் கொந்தளிக்கிறது ஜுவாலைகளால் ... வெப்பம் உமிழ்ந்து எழுந்து உறை பனி பாறைகளை உருக்கிய நீர் சொட்டும் விழியோரம் நனையும் வரைந்த சித்திரங்கள் நிதித்யாசனத்திலிருக்க உள்ப்பரப்பில் சாசனம் உரைத்த துகிலிகை நிதம் நிரஞ்சனமாகக் கிடக்கிறது திம்பிரமை இல்லாதவனைப் போல ஆர். ஆல்பன்
நினைவுகளின் தேடல்
- Get link
- X
- Other Apps
பீறிட்டெழும் முழக்கங்கள் உறக்கத்தை கலைத்து கரையில் அலையாய் மோதுகிறது . சாம்பலாக்க யத்தனிக்கிறது எரியும் விளக்குகள். நிலா வானில் பசுமை ஆழ்ந்த அசைவற்ற மௌனம் நினைத்துப் பார்க்க முடியவில்லை . ஓயாமல் அலைந்தது எரிக்கின்ற கேள்விகளின் தேடலின் பிணமாவது மிஞ்சும். நினைவுகள் தேடும் நிம்மதியை திருப்பிதா அல்லது நிரந்தரமான மரணத்தையாவது .
ஓய்வு
- Get link
- X
- Other Apps
அங்கும் இங்குமாய் ஓடி விளையாடிய மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது கோடை மரங்களின் இலைகளுடன் . யாரும் வருவாரில்லை அறைகள் அடைபட்டு கிடக்கிறது சிலந்தி வலைகளுடன் . மதிலை விட்டு வெளியேறுகின்றன ரசிப்பதற்கு எவருமில்லாததால் பூக்கள். லேசான தென்றல் மரங்களின் சலனம் ஓய்ந்திருந்தது அதிகாலையில் சப்தமிட்டு க் கொண்டிருந்தது பறவைகள் ! மௌனங்கள் மட்டும் அனுசரிக்கப்பட்டது இரவுகளில்... வெற்றிடமாக்கி விட்டது பள்ளி விடுமுறை என் மனதை மட்டுமல்ல...
செங்கல்லு சுள்ள
- Get link
- X
- Other Apps
என்னவாக்கும் பாவம் செத்து ஒண்ணும் போவ மாட்டோம் வேல செஞ்சா. நெலம வந்திருக்காது இப்படி கெடந்து ஓட கெட்டினவனோ அப்பனோ எடுத்து தின்னக் கணக்கா உண்டாக்கி இட்டிருந்தா . போவேண்டாம் பில இனி அஞ்சு வர படிச்சது மதி படிச்சு என்ன வேல கிட்ட போவுது . திலிஞ்சு பாக்க மாட்டினும் பட்டினி கெடந்தாலும் குடும்ப கார யாரும் பணம் இல்லாத்தாண்டு . கெட்டினவன் செத்த பதினாறு தொட்டு போவ தொடங்கியாச்சு எனக்க இந்த பயலையும் கொண்டு சுள்ள பெரைக்கு.
சோக சித்திரங்கள்
- Get link
- X
- Other Apps
பட்டாசு சப்தங்கள் எல்லா வீடுகளிலும் பாகு பாடில்லாமல் பண்டிகை வந்து விட்டதால் குழந்தைகளுக்கென்று வாங்கிச் செல்ல மறப்பதில்லை கலர் மத்தாப்பு ரகங்கள் தரை சக்கரம் , குரவை சாட்டை என்று விரையும் ராக்கெட்டுகள் மின்மினி ரகங்களும் வானில் ஓவியம் தீட்டும் இருட்டை அலங்கரிக்கும் விசித்திரமான ஒன்றுதான் இந்த பட்டாசுகள். நம் மனங்களை மகிழ்விப்பதற்க்கென்று பள்ளியறை பட்டாசு சாலையென தேங்கி கிடக்கும் பிஞ்சுகளின் உழைப்பில் உருவானதென எவரும் நினைத்து பார்ப்பதில்லை.
அவர்களுக்காக...
- Get link
- X
- Other Apps
வானைக் கிழித்து அம்பாய் இறக்கை விரித்து பறக்க ஆசைகள் முடமாய் ... கழுகுக் கண்களில் கொடூரம் தவழ்ந்து பறக்கப் பார்க்க தகர்த்து சிதறும் பொடியாய் ... பறந்து பார்க்கிறது மனம் எல்லாம் மறந்து இறக்கை இல்லாமல் ... சோக சுமைகள் முதுகில் சோலை வனத்தில் நினைவுகள் பழையனவாய் ... பச்சோந்தியாய் மனித நிறங்கள் குணங்கள் நிஜங்களை நோக்க நிழல்கள்... ஆர்.ஆல...
சொட்டுகள்
- Get link
- X
- Other Apps
சொட்டுகள் நீர் மேல் கொப்புளங்கள் மணலில் நட்சத்திரங்கள் வரவழைக்கிறது மனதில் கவிதையும் கூட ... பலமுறை எனக்கு வலிக்க வேண்டுமென்று ஆவேசம் தெறிக்க அறைந்த போதும் பதில் ஏதுமில்லை புன்னகையைத் தவிர . இப்படியாய் கற்றுத்தருகிறது எதோ ஒருவிதத்தில் நனைந்துக் கொண்டிருப்பதால். பிறர் கஷ்டமறியாமல் போகும் திசையை தடை படுத்தி விடப்பார்க்கும் இந்த மழை த் துள்ளிகளே இப்படித்தான்.
கைதியாக
- Get link
- X
- Other Apps
கைதியாக ... என்னைச் சுற்றி உடலோடு பிணைந்து கை கால்களின் அசைவில் ஒலிக்கும் சங்கிலியின் சப்தம் செய்த தவறுக்காக கிடைத்த தண்டனை அனுபவித்திருக்கலாம் தாராளமாய்... பதில் வருவதற்காக செய்த சித்திரவதைகளால் சப்தங்கள் எனக்குள்ளிலிருந்து வெளிவரவில்லை. கவனிக்க வருவாரில்லை எவரும்... நிலைக்கவில்லை எதுவும் என் எதிரில்... உங்களுக்காக இனியும் கேள்விகள் கேட்கும் என்ற நம்பிக்கையும் செத்துக்கொண்டிருக்கிறது .