சாபம்
உருப்படமாட்டான்
எனக்கப் பயல
அடிச்சவனுக்க கையில
நீக்கம்பு பிடிச்சு
அவன் குடும்பம் வேரற்று, குற்றிமுட்டி
அவன் படிய பாட பாரு .
தல போற தப்பா செஞ்சான்
மற்றவனுக்க பெண்ண ஸ்னேஹிச்சாண்டு
இப்படி எடுத்திட்டு தல்லி
இடிச்சு சதச்சு பிளிஞ்சு விட்டானுவ
வாயில மண்ணு விளுந்தவனுவ
இப்படியொக்க செய்ய
என்னம்பா இவன்மாருக்கு
மனசு கேட்டது .
நெல்லு வாலு போல
கோரம் பாயில கெடக்கிய
எனக்க மோனுக்கு
வெளிப் பருத்தியும் முட்டையும்
கொடுத்துப் பாக்கிலாம்
நேரம் வெளுக்கட்டு .
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment