ஓய்வு


அங்கும்  இங்குமாய்
ஓடி விளையாடிய  மைதானம்
வெறிச்சோடிக்  கிடக்கிறது
கோடை  மரங்களின்  இலைகளுடன் .

யாரும் வருவாரில்லை
அறைகள்
அடைபட்டு கிடக்கிறது
சிலந்தி  வலைகளுடன் .

மதிலை விட்டு வெளியேறுகின்றன
ரசிப்பதற்கு  எவருமில்லாததால்
பூக்கள்.

லேசான தென்றல்
மரங்களின்  சலனம்
ஓய்ந்திருந்தது  அதிகாலையில்
சப்தமிட்டு க்  கொண்டிருந்தது  பறவைகள் !

மௌனங்கள் மட்டும்
அனுசரிக்கப்பட்டது   இரவுகளில்...

வெற்றிடமாக்கி  விட்டது
பள்ளி  விடுமுறை
என் மனதை  மட்டுமல்ல...

Comments