செங்கல்லு சுள்ள
என்னவாக்கும் பாவம்
செத்து ஒண்ணும் போவ மாட்டோம்
வேல செஞ்சா.
நெலம வந்திருக்காது
இப்படி கெடந்து ஓட
கெட்டினவனோ அப்பனோ
எடுத்து தின்னக் கணக்கா
உண்டாக்கி இட்டிருந்தா .
போவேண்டாம் பில இனி
அஞ்சு வர படிச்சது மதி
படிச்சு என்ன வேல கிட்ட போவுது .
திலிஞ்சு பாக்க மாட்டினும்
பட்டினி கெடந்தாலும்
குடும்ப கார யாரும்
பணம் இல்லாத்தாண்டு .
கெட்டினவன் செத்த
பதினாறு தொட்டு
போவ தொடங்கியாச்சு
எனக்க இந்த
பயலையும் கொண்டு
சுள்ள பெரைக்கு.
Comments
Post a Comment