நாலு எழுத்து படிக்க போய்



தாறு  மாறாட்டு
அடிச்ச  வேதனையும்
தீரல்ல  இதுவரைக்கும் .

இருட்ட வெளுக்க
குத்தியிருந்து  படிச்சும்
ஒண்ணும் நிக்குதில்லை  மனசில.

நாலு  எழுத்து
படிச்சாத  இருந்தா
நாள ஒருகாலம்
பஸ்க்க  போடு பாக்கவும்
தெண்ட  வேண்டியது  வரும்
பலரும் சொல்லினும் அடிக்கடி .

அப்பனும் அம்மையும் தொலஞ்சும்
படிக்க    ஆசப்பட்டு 
பள்ளிக்கு  போனா
படிக்கிறவனுக்கு  தான்
சொல்லிக் கொடுக்கிறாரு  டீச்சர் .

எ துக்கில    வாறேண்ணு
கேக்கிறதுக்கு  பதிலா
அடிக்கிறதுக்கு  பதிலா
சொல்லித்  தந்திருந்தா
என்னாலையும்  வாங்கியிருக்க  முடியும்
பஸ்ட்  மார்க்கிண்ணு
இப்பவும்  தோணுது

ஆர். ஆல்பன்   


Comments