பரிசல்


காற்றின்  கைகளிலாடும் 
என்  பயணங்கள்
நிலையற்றதாகி  விடுகின்றன .

உதயங்களில்லாமல் போன
வாழ்க்கையைப்   போல
கவிழ்க்கப்  பார்க்கும் 
அலைகள் .

கோபக்  கூக்குரலிட்டுக்  
துரத்தும் திசையில்
என் நினைவுகள் கலையும்.

நிழல்  யாவும்
மரக்கிளைகள்
இல்லாமல்  போன கரையில்
நீந்தி களைத்து கரையேற
ஒரு குடை 
தன் தலை மறைத்தவாறு
பக்கம்  வருகிறது .
ஆர்.ஆல்பன்   

Comments

Post a Comment