நெஞ்சினலைகள்



வார்த்தைகளால்  வானுயர்ந்த
வள்ளுவரும்  சிலையாய்
அலைகளின் நடுவே
அன்பைப்  போதித்த
விவேகானந்தருக்கு ஆசிரமம்

சமாதிக்குள்ளேயும்
காந்தியின் நாட்கள்

திறப்பு விழா கனவுடன்
காமராஜர்  மணி மண்டபம்
முத்தமிட்டு  சங்கமிக்கும்  முக்கடற்கரையில்
இனியும் வரலாம் பல பேர் .

இவர்களை  நம்பிய  தொழிலால்
பசியாறி  விடுகின்றன  பொழுதுகள்
விடியாத ஒரு இரவின் விளிம்பில்
மோதி  மோதி  சிதைக்கப்  பார்க்கும்
அத்தனையும்  மீறி
உயர்ந்து எழுகிறது  அலை
பிரளமான  என் மனசின் உள்ளேயும் ........

ஆர். ஆல்பன்   
   

Comments