யதார்த்தம்
முகம் நிமிர்த்தி யறைந்து
திருப்பி திருப்பி
தகர்த்திருக்கலாம் .
எதிர் பாராத விதமான
தாக்குதல்களால்
நிலை குலைய வைத்திருக்கலாம் .
பீறிட்டு கண்ணீர்
கசிவதை
பார்க்க விரும்பியதால்
பொறுமைக்கெதிராய்
எழுந்திருக்கலாம் .
பத்திரமாய் என்னிடம்
அடக்கி வைக்கப் பட்ட
புன்னகை மட்டும்.
கேட்டு விட வில்லை
எதைப் பற்றியும் ...
எங்கள் பிணைப்பு
அகன்று கழன்று நிமிஷத்தில்
தூரமாகவிடக் கூடுமென்பதால் .
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment