துகிலிகை



முடிந்து விட்டதென
துயில் கொள்ளும் வேளை
தீட்சண்யத்தின்  கண்  முளைகள்
கொந்தளிக்கிறது  ஜுவாலைகளால் ...

வெப்பம் உமிழ்ந்து  எழுந்து
உறை   பனி  பாறைகளை
உருக்கிய  நீர் சொட்டும்
விழியோரம்  நனையும்

வரைந்த சித்திரங்கள்
நிதித்யாசனத்திலிருக்க
உள்ப்பரப்பில்  சாசனம்

உரைத்த துகிலிகை  நிதம்
நிரஞ்சனமாகக்  கிடக்கிறது
திம்பிரமை  இல்லாதவனைப் போல

ஆர். ஆல்பன் 

Comments