தேடல்



யாரிடமும் சொல்லாமல்
மௌனமாய் தேடுகிறேன்
வார்த்தைகளின் அர்த்தங்களை ...

தோல்வியின்  அனுபவங்களை
மனசுக்குள்  இருத்தி
வெற்றியின் ரகசியங்களை
வெளிக் காட்டாமல்
தொடர்கிறது
என்  லட்சியத்துக்கான   தேடல் .

ஆசைகள்  ஒதுக்கி
புரட்சிப்  பாதைக்காக
தடைகளை  விலக்கி
முன்னேறிக்  கொண்டே
தீபத்தின்  ஒளியில்
இருட்டை விரட்டியபடி  
நம்பிக்கையுடன்  தேடுகிறேன்
நாளைய  நாட்களை .

ஆர். ஆல்பன் 

Comments