சிறகுகள்
பறந்து பார்க்க முடியவில்லை .
வான் மீது உலா வர
பூமி மீது விரல் பதிக்க
விடுவதில்லை ஆளுமைகள் .
அடிக்கடி
வெட்டப்படுகின்றன சிறகுகள்
நிலைத்திருக்கவும்
நிஜம் உதிர்க்காமலிருக்க .
ஒடுக்கங்களுக்கு அடங்கி
வதைகளுக்கு அஞ்சி
முடங்கி விட போவதில்லை யென
வெளியேறி வரும் வேளை
நிந்தையின் சித்ரவதைகளுடன்
கழுத்துக்கு தாலி .
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment