கண்ணீரும் கைய்யூமாய் ...
மூத்த மகளுக்க
கல்யாணம் முடிஞ்ச மறுவருஷம் முதல்
கைக்குழந்தையுடன்
வந்து நிக்கியா வீட்ல...
கண் காணாத
பிறவி குருடியுமாய் இருக்கும்
ரெண்டாவது மகளை
கெட்டிக் கொடுக்காத வீட்ல ...
குடும்ப தகராறில்
வெட்டு குத்து குலவாதவுமாய்
மாப்பிள்ளை செத்து
கடைசி மகளும்
வேற வழியில்லாத எனக்க வீட்ல...
கழுத்தில முடிச்சு போட்டவன்
கண் மூடின பெறவு
கருவாடும் மரக்கறியும்
கடவம் கணக்கில செமந்து
வளத்திய பிள்ளியளோடு
எழிச்சு நடக்க ஏலில்லாம
நானும் கெடக்கியன்
பூமிக்கு பாரமாய் என்ன வீட்ல ...
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment