சாரல் துளிகள்



பரந்து விரிந்து  கிடக்கும் 
வானில் வலம் போகும் 
கார் முகிலால் உருவாக்கப்பட்ட  சாரல்கள் 
காற்றின்  சீற்றத்துக்குப்  பயந்து 
கலைந்து தூரம்போய் 
நிலம்  பாதிக்கிறது 
தன்  விரல்களை .

புறம் உதறி  தள்ளி 
ஓடிய திசைகளில் ஓடி வருகிறது 
முகம் நனைத்து  
பச்சைப்  புல்வெளிகளை 
காடு மலைகள் 
கடல்களின் நினைவுகளில் 
பிறப்பெடுத்து  கனிந்து 
மழை ஓய்ந்த மறுகணம் தொட்டு 
நினைவுகள் சொட்டும் 
ஒரு மரமாய் ஆனது 
என் வாழ்க்கை .
ஆர். ஆல்பன்     

Comments