என்னுலகம்


எதிர்பாராத  விதத்தில்
வெடிக்கும்  கலவரம்
பீதியுடன் சிதறி  ஓடும் மனிதர்கள்
வீதியெங்கும்  ரத்த  வெள்ளம்
உயிரோடு கடைசி போராட்டம்
அதிர்ச்சியில்  உறைந்த  முகங்கள்
எங்கும் ஒப்பாரிக்  கதறல்கள்
இனியொருமுறையும்
என்னுலகு வேண்டாம் .

கலைந்து  மேகங்களுடன்
மிதந்து  வரும்  தென்றல்
பசுமையின்  கொஞ்சலில்
பறந்து திரியும் பறவைகள்
ஜாதி  மத பேதமற்ற
மழலை மொழி
ரகசியங்களை  கிசுகிசுக்கும்
தெளிந்த நீரோடை
பகையற்ற பரிவுடன்
என் மனசு
தேடிக்  கொண்டிருக்கிறது  எப்போதும்

ஆர். ஆல்பன்      

Comments