சிறகடிக்க சிறகில்லை



விபரம் தெரியாத நாட்களில்
யாருக்கும் தெரியாமல்
வெளியேறி வந்ததுண்டு
பள்ளியை  விட்டு  வீட்டுக்கு.

பள்ளிக்கு போவது
விருப்பம் இல்லாமல்
சின்ன வயதில் .

இப்ப படிக்க விருப்பப்பட்டு
பனிரெண்டாம் வகுப்பில்
நல்ல மதிப்பெண் வாங்கிய  பின்னும்
முற்றுப்  புள்ளியானது
மேல் படிப்பு .

வீட்டை  விட்டு
வேலை தேடி
வெளிநாடு   போய்  திரும்பிய
அப்பாவின் கடன்களால் .

வெட்டப்பட்டது
கல்லூரியை நோக்கி
பறந்துக்  கொண்டிருந்த
என் மனசின் சிறகுகள்.
ஆர்.ஆல்பன்  

Comments