கனவுகள் நிலைப்பதில்லை


கலையும்  கனவுகளாய்
கண்ணெதிரே  மேகங்கள் .

சொக்கச்  சுமையுடன்
ஓயாமல்  தாலாட்டும்
அலை

கட்டிய வீட்டை
கலைத்  தெறினும்  தொடரும்
நண்டுகளின்   நொண்டி  பயணம்

உப்பு  நீரில்
விழி  மீன்கள் .

நித்திரை  இரவுகளில்
நிம்மதி  இல்லாமல் 
சொக்கி திரியும்  திரியும் மனங்கள்.

நாளைய  நம்பிக்கையுடன்
நிமிரும்
மனங்கள் எத்தனையோ .

ஆர்.ஆல்பன் 

Comments