கைதியாக
கைதியாக ...
என்னைச் சுற்றி
உடலோடு பிணைந்து
கை கால்களின் அசைவில் ஒலிக்கும் சங்கிலியின் சப்தம்
செய்த தவறுக்காக
கிடைத்த தண்டனை
அனுபவித்திருக்கலாம்
தாராளமாய்...
பதில் வருவதற்காக
செய்த சித்திரவதைகளால்
சப்தங்கள்
எனக்குள்ளிலிருந்து
வெளிவரவில்லை.
கவனிக்க வருவாரில்லை
எவரும்...
நிலைக்கவில்லை எதுவும்
என் எதிரில்...
உங்களுக்காக இனியும்
கேள்விகள் கேட்கும்
என்ற நம்பிக்கையும்
செத்துக்கொண்டிருக்கிறது .
Comments
Post a Comment